கனடாவில் குடியேற்றத்துடன் அதிகரிக்கும் சனத்தொகை காரணமாக புதிதாக செல்வோர் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சமீப காலமாக இலங்கையில் உள்ளவர்கள் கனடா, பிரித்தானியா மற்றும் ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் குடியேறுவதற்கு முயற்சி செய்துவருகின்றனர்.
எனினும் மேற்குலக நாடுகளில் உள்ளவர்கள், தமது வாழ்க்கை இயந்திரத்தை போன்றது என கூறினாலும் பலர் அதனை ஏற்றுக்கொள்வதாக இல்லை.
அண்மைய நாட்களாக கனடாவிற்கு செல்வதில் தமிழர் தாயகம் மாத்திரமல்லாமல் இலங்கை முழுவதும் உள்ளவர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
அந்த வகையில் கனடாவில் கடந்த ஆண்டு சுமார் 70 இலட்சம் கனேடியர்கள் பட்டினியுடன் போராடியதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டில் 18 வீதமான குடும்பங்கள், உணவுப் பாதுகாப்பின்மையை அனுபவித்துள்ளன என கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
உணவுப் பாதுகாப்பின்மை என்பது தரமான உணவு அல்லது போதுமான அளவு உணவின் பற்றாக்குறை என திணைக்களம் வரையறுத்துள்ளது.
சிலர் அதிகரித்த பணவீக்கத்தின் மத்தியில் பல நாட்கள் உணவு இல்லாமல் இருந்தார்கள் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு 16 வீதமான கனேடிய குடும்பங்களே உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டதாக ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பின்மை தீவிரமான ஒரு பிரச்சினையாக காணப்படுவதாக திணைக்களம் கூறியுள்ளது.
ஏனெனில் இது பல்வேறு நோய் நிலைமைகள், மனநலப் பிரச்சினைகள், ஏனைய நோய்கள் மற்றும் தொற்றுநோய்களுடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார கட்டமைப்புகள் மீது அதிகரிக்கும் அழுத்தம் உணவுப் பாதுகாப்பின்மையானது, மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிப்பதுடன், முன்கூட்டிய இறப்பிற்கும் வழி வகுக்கின்றது என கண்டறியப்பட்டுள்ளது எனவும் திணைக்களம் கூறியுள்ளது.
அத்துடன் இந்த நிலைமைகள் நாட்டின் சுகாதார பராமரிப்பு கட்டமைப்பு மீதான அழுத்தங்களை அதிகரிக்க செய்கின்றது எனவும் திணைக்களத்தின் ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக