தற்போது கொழும்பு பகுதியில் வேகமாக கண் நோய் பரவி வரும் நிலையில், கண் சிவக்கும் தன்மை மிக அதிகமாக இருந்தால் அது கண்ணின் உள்ளே மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும் என சிரேஷ்ட வைத்தியர் தௌபீக் தெரிவித்துள்ளார்.
தற்போது கொழும்பில் பாடசாலை மாணவர்களிடத்தில் ஆபத்தான நோயாக மாறி வரும் கண் நோய் தொடர்பிலும், அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் எமது ஊடகத்திற்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதேவேளை, கண் வருத்தத்தினால் பாதிக்கப்பட்ட அனேகமானவர்கள் தற்போது மருந்தகங்களுக்கு மருந்து பெற்றுக் கொள்ள வருவதாக மருந்தக ஊழியர்கள் குறிப்பிடுகின்றனர்.
கருத்துரையிடுக