இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம ஒலியால் ஆபத்து!! பேராசிரியர் விளக்கம்!!

இலங்கையின் மலையகப் பகுதியில் கேட்கும் மர்ம ஒலியினால் பாதகமான நிலைமை ஏற்படலாம் என பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொத்மலை, ஹெதுனுவெவ வேத்தலாவ பகுதியில் உள்ள மைதானத்தில் இருந்து வரும் மர்ம சத்தம் காரணமாக அந்தப் பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

அந்தப் பகுதி மக்கள் அச்சம் காரணமாக அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ள நிலையில், அது குறித்து உடனடி தீர்வு வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் பேராதனை புவியியல் மற்றும் சுரங்கப் பிரிவின் முன்னாள் புவியியல் மற்றும் சுரங்கப் பிரிவின் பேராசிரியர் அதுல சேனாரத்னவின் தலைமையில் நேற்று விசாரணை நடத்தப்பட்டுள்ளது.


நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபடவின் வேண்டுகோளுக்கமைய, புவியியல் மற்றும் சுரங்கப் பிரிவின் முன்னாள் தலைவரும், புவியியல் பேராசிரியருமான அதுல சேனாரத்னவின் பங்களிப்புடன், பேராதனை பல்கலைக்கழக புவியியல் துறை அதிகாரிகளால் இந்த நிலம் தோண்டப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.


மர்ம ஒலி வரும் பகுதிகளில் முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பகுதியில் ஏரி இருந்தமையினால் அந்த பகுதிக்கு அடியில் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அது தீவிரமான சூழ்நிலை இல்லை எனவும் அதிகாரிகள் கூறியுள்ளார்.




எனினும் அது எதிர்காலத்தில் பாரதூரமான நிலைமையாக மாறும் நிலை காணப்படுவதாகவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த இடத்தை அதிகாரப்பூர்வமாக ஆய்வு செய்து, புவியியல் மற்றும் சுரங்கப் பிரிவின் ஆய்வு அறிக்கையை அப்பகுதி மக்கள் கோருகின்றனர்.

0/உங்கள் கருத்தை சொல்லுங்கள்

புதியது பழையவை