கனடியர்களுக்கான விசா சேவையை மீண்டும் ஆரம்பித்த இந்தியாவின் முடிவை கனடா வரவேற்றுள்ளது.
கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அந் நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ பகிரங்க குற்றஞ்சாட்டி இருந்தார்.
எனினும் இந்தியா அதை திட்டவட்டமாக நிராகரித்தது. இந்த விவகாரம் இரு நாட்டு உறவில் பாரிய விரிசலை ஏற்படுத்தியது.
இதன் எதிரொலியாக கனடா நாட்டவர்களுக்கு விசா வழங்கும் நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் நிறுத்தி வைத்தது.
இந்த சூழலில் வணிகம், மருத்துவம் உள்பட குறிப்பிட்ட சில பிரிவுகளுக்கான விசா சேவையை மீண்டும் தொடங்குவதாக இந்தியா (25) நேற்று முன்தினம் அறிவித்தது.
இந்த நிலையில் விசா சேவையை மீண்டும் தொடங்கிய இந்தியாவின் முடிவை கனடா வரவேற்றுள்ளது.
இது குறித்து கனடாவின் குடியேற்றத்துறை மந்திரி மார்க் மில்லர் கூறுகையில், "கனடா பிரஜைகள் பலரின் ஒரு கவலையான நேரத்துக்கு பிறகு, இந்தியாவின் இந்த நடவடிக்கை ஒரு நல்ல அறிகுறி. விசா சேவை நிறுத்தம் நடந்திருக்கக் கூடாது என்பதே எங்கள் உணர்வு என தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக