கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மூன்று வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சத்திரசிகிச்சையை மேற்கொண்ட வைத்தியருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சிறுநீரக சத்திரசிகிச்சையின் பின்னர் குறித்த சிறுவன் உயிரிழந்திருந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் சிறுவனின் மரணத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து சுகாதார அமைச்சும் வைத்தியசாலையும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
இவ்வாறான நிலையிலேயே கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் இயக்குநர் வைத்தியர் ஜி விஜயசூரிய இதனை தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்து பல தரப்பினர் முறைப்பாடு செய்துள்ளதையடுத்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை சிறுவனுக்கு சத்திர சிகிற்சை செய்த வைத்தியர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்ந்லையில் இது குறித்து வைத்த்யசலை பணிப்பாள்ர் கூறுகையில்,
இந்த சம்பவம் நடைபெற முன்னரே வைத்தியர் விசாவிற்கு விண்ணப்பித்திருந்ததால், சிறுவன் உயிரிழப்பின் விசாரணைகள் முடிவடையும் வரை எந்த முடிவிற்கும் வரமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக