வவுனியாவின் வெவ்வேறு இடங்களில் வீதியில் பொது மக்களை வழிமறித்து நகைகளை திருடிய சம்பவங்கள் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து கார் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் காவல்துறையினர் நேற்று (07) தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் திருட்டுச் சம்பவங்களும் வீதிகளில் செல்வோரிடம் சங்கிலி அறுப்புச் சம்பவங்களும் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்டவர்களால் கடந்த 6 மாதங்களாக காவல்துறையினரிடம் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் குற்றச்செயலில் ஈடுபட்ட குழுவைச் சேர்ந்த 6 பேரைக் கைது செய்துள்ளனர்.
அவர்கள் குற்றச்செயல்களை செய்ய பயன்படுத்திய கார் ஒன்றும், இரண்டு மோட்டார் சைக்கிள்களும் காவல்துறையினரால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக விசாரணைகளின் பின் குறித்த 6 பேரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட காரில் வைத்தியசாலை சேவையில் பணியாற்றுவர்கள் பயன்படுத்தும் (மருத்துவ சின்னம்) ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக